கூடுதல் விலைக்கு மது விற்றால் ஜி.எஸ்.டியுடன் 10,000 ரூபாய் அபராதம்

தீபாவளி பண்டிகையின்போது கூடுதல் விலைக்கு மது விற்றால் ஜி.எஸ்.டியுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரும் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்படும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஆயிரம் ரூபாய் முதல் ஜி.எஸ்.டியுடன் அதிகபட்சமாக10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலாண்மை இயக்குனரின் இந்த உத்தரவால் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Exit mobile version