கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த உதவி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் காலிப் பணியிடங்ள் ஜனவரி மாதத்திலிருந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்று புள்ளி 13 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 10 ஆயிரம் பேருக்கு கேங்மேன் பணிகள் வழங்கப்படும் என்றார்.
முன்னதாக குமாரபாளையம் பகுதியில் அம்மாவின் அரசு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பெறபட்ட மனுக்களின் அடிப்படையில், 25 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.