கன்னியாகுமரி பகுதியில் இலை அழுகல் உள்ளிட்ட நோய்களால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வளர்க்கப்பட்ட வாழைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடுக்கரை, காட்டுபுதூர் திடல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்களை மஞ்சள் குருத்து மற்றும் இலை அழுகல் நோய் தாக்கியுள்ளது. இந்த நோய் மற்ற வாழைகளுக்கு பரவாமல் இருப்பதற்காக பாதிக்கப்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
இதில் சுமார் 75 ஆயிரம் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட வாழைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.