தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக, 10 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தயார் நிலையில் உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாசப்ப கவுண்டன்புதூரில், மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால், தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பத்து தொலைக்காட்சிகள் கல்வி கற்றுத்தர தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.