பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடவொதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, குஜராத் மாநில அரசு இன்று முதல் நடைமுறைப்படுத்துகிறது.
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம், அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்து. இதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலும் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் இது தொடர்பான சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை, முதன் முறையாக குஜராத் அரசு இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.