பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான மசோதா, மக்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை வகிக்கும் மாநிலங்களவையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இதனைதொடர்ந்து, இந்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.