பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள், மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், ‘பிப்ரவரி 1-ம் தேதி முதல் பணிகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளது.

Exit mobile version