பேனர் வைப்பது தொடர்பாக 10 புதிய விதிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பேனர் வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி 10 புதிய விதிகளை அறிவித்துள்ளது. பேனர் வைப்பதற்கு அனுமதி கட்டணமாக 200 ரூபாயும், காப்பீட்டு தொகையாக 50 ரூபாயும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேனர் வைக்க வேண்டும் என்றால் 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்த அனுகி தடையின்மை சான்று பெற வேண்டும் என்றும், அனுமதி பெற்றதை விட அதிகமாக பேனர் வைத்தாலும் சட்ட விரோதமாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் வழக்குப் பதிவு செய்து ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version