புதிய 10 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நீதிபதிகளும் இன்று பதவியேற்க உள்ளனர்.

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த சந்திரசேகரன், நக்கீரன், வி.சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள் உள்ளிட்ட 10 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில், இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, இன்று பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். இதன்மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63ஆக உயருகிறது. பதவியேற்பு நிகழ்ச்சி உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படும் என தலைமை பதிவாளர் குமரப்பன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version