அமெரிக்காவில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை – அதிபர் டொனால்டு டிரம்ப்!

உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்கா புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாகவும், இதுவரை 10 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக அனைவரும் வலுவுடன் போராடும் நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் எதிர்காலம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கையில்தான் உள்ளது என்றும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version