மதுரையில் சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மதுரை மேல அனுப்பானடி ரயில்வே கேட் பகுதியில் சாலை நடுவே திடீரென பத்தடி அளவிற்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாற்றுப் பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர் . மண் அரிப்பின் காரணமாக பாதாள சாக்கடை குழாயில் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து, பள்ளத்தைச் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்