10 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

10 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோடைக்காலம் என அழைக்கப்படும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். குறிப்பாக கோடை வெயிலின் உச்சக்கட்டம் என சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனிடையே கடந்த ஆண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version