உணவு பார்சல் வாங்க துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 % சலுகை

பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ள நிலையில் புதுக்கோட்டையில் துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 % சலுகை அறிவித்துள்ள உணவக நிர்வாகத்தின் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் பாத்திரம் மற்றும் துணிபையுடன் பார்சல் வாங்க வருபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஹோட்டல் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. உணவகத்தின் இந்த முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version