காற்றாலை மூலம் நடப்பாண்டில் 10 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் -தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

காற்றாலை மூலம் நடப்பாண்டில் 10 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 8 ஆயிரத்து 300 மெகா வாட் திறனில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் அமைத்துள்ளன. அந்த மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது. இந்த ஆண்டு காற்றாலை சீசனில் காற்று பலமாக வீசியதால், மின்னுற்பத்தியும் அதிகமாக இருந்தது.

இதனால் நாள்தோறும் சராசரியாக 13 கோடி யூனிட் அளவிற்கு காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை, நாள்தோறும் 10 கோடி யூனிட் என்ற அளவில் தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்துள்ளது.

Exit mobile version