1 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வருகை

மும்பையில் இருந்து 1 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமான மூலம் சென்னை வந்தடைந்தன.

புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 1 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் எடுத்துவரப்பட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version