கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக 1 சதவீதம் கூடுதல் வரி

கேரள அரசின் வெள்ள நிவாரண பணிகளுக்காக, 1 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டிக்கான அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

கேரள மாநிலம் சமீபத்தில் வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்காக, ஜி.எஸ்.டி.யில் 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்க கேரள அரசு அனுமதி கோரியது. இதனை பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி தலைமையிலான, ஜி.எஸ்.டிக்கான அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டது. இதனைதொடர்ந்து, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம், கேரள மாநிலம் 2 ஆண்டுகளுக்கு பேரிடர் வரியாக 1 சதவீத கூடுதல் வரி வசூலித்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version