கள்ளக்குறிச்சியில் உள்ள பருத்தி வார சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி வேளான் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி சந்தைக்கு விழுப்புரம்,கடலூர்,பெரம்பலூர்,திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் எல்.ஆர்.ஏ ரகம் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ஐந்து ஆயிரத்து 509 ரூபாய்க்கும், சுவின் ரகம் ஏழாயிரத்து 59 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.அதன்படி, இந்த வாரம் ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு வர்த்கம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.