இந்தியாவில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 6 ஆயிரத்து 977 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்தை நெருங்குகிறது.
மகாராஷ்டிராவில் நேற்று 3 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 14 ஆயிரத்து 600 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 14 ஆயிரத்து 56 பேரும், டெல்லியில் 13 ஆயிரத்து 418 பேரும், ராஜஸ்தானில் 7 ஆயிரத்து 28 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 665 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 268 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 57 ஆயிரத்து 721 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 21ஆக உயர்ந்துள்ளது.