தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் திட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-பாஸ்கரள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.