ஹேக்கர்கள் கைவரிசை – UPSC அதிகாரிகள் அதிர்ச்சி!

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள பணியிடங்களுக்களுக்கு தேர்வுகள் நடத்தி தேர்வு செய்து தருவது யு.பி.எஸ்.சி.யின் வேலையாக உள்ளது. இதற்காக, http://www.upsc.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், காலிப் பணியிடங்களையும், புதிய பணிக்கான அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையில், இந்த இணையதளம் ஹேக்கர்களால் திடீரென முடக்கப்பட்டது.

டோரேமொன் கார்ட்டூன் படத்துடன் ‘டோரேமொன்! பிக் அப் தி கால்’ என்ற வாசகத்துடன் இணைய தள திரை மின்னியது. இதை சிலர் பிரதமர் அலுவலகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், அது தொடர்பாக டுவிட் செய்தனர். இதனால், மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, யு.பி.எஸ்.சி. இணையதளம் சரி செய்யப்பட்டு, வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது.

Exit mobile version