ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலின் முக்கிய விழாவாக ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோயில் அடிவாரப் பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் திறந்து வைத்தார்.

பின்னர் கோயிலுக்குச் செல்லும் பகுதியில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பின்பு கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

Exit mobile version