தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். அப்போது, தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, சில விரும்பத்தகாத சமூக விரோதிகள் பொய் பிரசாரத்தால் தற்போது மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். தங்கள் பகுதியில் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி ஊக்கத்தொகை போன்ற பல சமூக பணிகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: SterliteTuticorinதூத்துக்குடிஸ்டெர்லைட்
Related Content
ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு - எதிர்க்கட்சித் தலைவர்!
By
Web team
April 20, 2023
தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த இஸ்லாமியர்கள்!
By
Web team
September 5, 2022
திமுக தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு! பிரச்சினையை தீர்க்கமுடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோ வைரல்!
By
Web team
September 5, 2022
'I LOVE YOU' சொன்ன அண்ணன்... மறுத்த பாசமலர்!
By
Web Team
August 14, 2021
இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது... ஏன்?
By
Web Team
August 1, 2021