தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் வேதாந்தா நிறுவனம் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வ ஆதாரங்களை ஆகஸ்ட் 20க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல் பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்துள்ளது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.