மதுரை வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், ஆற்றில் மாநகராட்சியின் திடக்கழிவுகளும், மருத்துவமனையின் கழிவுகளும் கலப்பதாக தெரிவித்தார். வைகை ஆற்றில் இருந்து தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெருவதாக தெரிவித்த அவர், ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக விவசாயிகள் முதல், அனைத்து தரப்பிரும் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார். வைகை ஆற்றை பேணி பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என கூறிய அன்புமணி, அது பொதுமக்களின் கடமையும் கூட என தெரிவித்தார்.
Discussion about this post