மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி விட்டதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
தருமபுரியில் பாமக சார்பில் நடைபெற்ற முப்படைகள் சந்திப்புக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர், அன்புமணி ராமதாஸ், அரூர் அருகேயுள்ள சித்தேரி மலைக் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பெண்கள், ஸ்டாலின் பேச்சை நம்பி, நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக சாடினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post