வெளிநாடுகள் வெளியேற வேண்டும்-இலங்கை அதிபர் பேச்சால் பரபரப்பு

வெளிநாடுகள், இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் அந்நாட்டு அதிபர் சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73-வது ஆண்டு கூட்டம் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய இலங்கை அதிபர் சிறிசேன, நாடு பிளவுபடாமல் இருக்க ராணுவம் ஆற்றிய பணி மகத்தானது என்றார். உள்நாட்டு பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை மீதான சர்வதேச தலையீடுகள், அழுத்தங்கள், சர்வதேச அச்சுறுத்தல்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய சிறிசேன, இலங்கையை சக்திமிக்கதாக மாற்ற இடமளியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் உடனான போருக்குப் பிறகு, இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், நீங்கள் செய்தது போதும், நாட்டை விட்டு வெளியேறுங்கள் என ஐ.நா.வில் சிறிசேன பேசியிருப்பது உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Exit mobile version