வீட்டில் பதுக்கிவைத்திருந்த 105 கிலோ குட்கா பறிமுதல்

சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 105 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சென்னை வேளச்சேரியில் பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, வேளச்சேரி சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் வேலு, அனைத்துக் கடைகளையும் கண்காணிக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியிந்தார்.

அதன் அடிப்படையில், வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கடைக்கு குட்காவை விநியோகம் செய்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், ஒட்டுமொத்தமாக குட்காவை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து, பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்வது தெரியவந்தது. மேலும், அவரது ஏஜிஎஸ் காலணியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த 105 கிலோ குட்கா, போதை பாக்கு, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, குட்காவை பதுக்கி வைத்திருந்த முருகனையும் போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version