விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளான சூரப்பட்டு, அன்னியூர், பனமலைபேட்டை, எடப்பாளையம், கொசப்பாளையம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திறந்த வேனில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் வேட்பாளருக்கு கிராம பெண்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.