விரைவில் 814 கால்நடை மருத்துவர்கள் நியமனம்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

 

தமிழகத்தில் விரைவில் 814 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ,அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே உள்ள தண்டல்கழனியில் 20-வது கால்நடைகள் கணக்கெடுக்கும் பணியை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர்,கால்நடை மருந்தகத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 38 லட்சம் நாட்டு கோழிகள் வளர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார். தீவன பற்றாக்குறையை போக்க, முதலமைச்சர், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்த அவர்,இதன் மூலம் தீவன பற்றாக்குறை தவிர்க்கப்படும் என்றார்.

மேலும் தமிழகத்தில் 814 கால்நடை மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பருவ மழை நோய்களை தடுக்க அரசு ,ஜெட் வேகத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version