விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் – ஐசிசி தரவரிசை பட்டியல்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் முதலிடங்களை தக்க வைத்துக்கொண்டனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 884 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா 842 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், 802 புள்ளிகளுடன் ஷிகர் தவான் 5-ஆவது இடத்தையும் பிடித்தனர். ஜோ ரூட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் முறையே 3 , 4-ம் இடங்களில் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்தார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 788 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், குல்தீப் யாதவ் 700 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தையும் பிடித்தனர். டிரென்ட் போல்ட், ஹாசில்வுட் 4 மற்றும் 5-ஆம் இடங்களில் உள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து 3-ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 5-ஆவது இடத்திலும் உள்ளன.

Exit mobile version