2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வாகி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த வீரர், வீராங்கனைகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வாகி இருக்கிறார். கடந்த ஆண்டில் எல்லா வகையான சர்வதேச போட்டிகளிலும் மொத்தமாக 8 சதம், 17 அரைசதம் உள்பட 2 ஆயிரத்து 598 ரன்கள் குவித்ததற்காக, அவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version