விஜய்யின் `சர்கார் படத்தின் ரிஸீஸ் தேதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும், சினிமா பிரபலங்கள் பலர் இதில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தீபாவளி விடுமுறைக்கு ‘சர்கார்’ ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version