'வர்மா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.  விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், வசூலிலும் அசத்தியது.

இந்தப் படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பாலா இயக்கத்தில், விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தமிழில் வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராஜூ முருகன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் வர்மா, படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Exit mobile version