வரும் 22-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வரும் 22 ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்குப் பருவமழை அடுத்த 48மணி நேரத்தில் நாடு முழுவதும் முடிவடைய உள்ளதால், வட கிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடக்கு அந்தமான் பகுதியில் வருகிற 22-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version