காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளின் உபரி நீர், மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டது. கனிசமாக உயரத்தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 89 புள்ளி 18 அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 99,372 கன அடியாகவும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிச்சாமி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் 19-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பா பருவத்தில் விவசாயிகள் நீண்டகால நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கேற்ற வகையில் சி.ஆர் 1009, சி.ஆர் 1009 சப்-1, ஏ.டி.டி 49 போன்ற நெல் ரகங்களை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர், யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்கள் வேளாண் கூட்டுறவு கடன் சங்கள்களில் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 19-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: TNGovernment
Related Content
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்
By
Web Team
December 23, 2021
துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"
By
Web Team
December 14, 2021
பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
By
Web Team
November 24, 2021
அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு - நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?
By
Web Team
November 24, 2021
அரசு அதிகாரிகள் அலட்சியம் - லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்
By
Web Team
November 17, 2021