தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத் தாழ்வு மண்டலமானது ஒடிசா, ஆந்திராவை நோக்கி நகரும் என்று அவர் கூறியுள்ளார். மத்திய வங்கக் கடல் பகுதிக்கு 11-ந் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள அவர், மத்திய வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் அதே நேரம், 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறியுள்ளார்.