வடபழனி காவல் நிலையத்தில் சி சி.டிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சி சி.டிவி கேமரா கட்டுப்பாட்டு அறை , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை மற்றும் வடபழனி காவல் நிலையத்தில் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

ஏற்கனவே வடபழனி காவல் நிலையத்திற்குடட்ட பகுதிகளில் 600 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் உள்ள நிலையில் புதிதாக 100 கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளரை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

“சென்னை மாநகரில் மட்டும் 1 லட்சத்து 20ஆயிரம் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 60,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன்ங்கள் சி சிடிவி கேமராக்களை பொருத்துவதன் மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும்.மேலும் வடபழனி காவல்நிலையத்தை தேசிய அளவில் சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்வதற்காக தேர்வு செய்து அனுப்பி உள்ளதாகவும் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

Exit mobile version