7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் உதவியுடன் மும்பைக்கும், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும்.
வரும் 2022ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 508 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் செல்லும் வகையில் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு ரயிலிலும் 10 பெட்டிகள் கொண்டதாகவும், மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையிலும் புல்லட் ரயில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.