இந்திய ரூபாய் மதிப்பு உடைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 73.77 காசுகளாக சரிவடைந்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ரூபாய் மதிப்பு உடையவில்லை , மாறாக அது உடைக்கப்பட்டது என விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே அவரது மற்றுமொரு டிவிட்டர் பதிவில் ,
45 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த அம்பானிக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை வழங்குவதா என பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுவீடன் நாட்டை சேர்ந்த எரிக்சன் நிறுவனம், அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆர்காம் நிறுவனம் ஒப்புக்கொண்டபடி 550 கோடி ரூபாயை எங்கள் நிறுவனத்துக்கு தரவில்லை. எனவே அனில் அம்பானி மற்றும் அவரது 2 உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளது.
இதை முன்வைத்தே ராகுல் காந்தி இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.