”ராகுல் குடும்பத்தில் மொத்த பேரும் திருடங்கதான்”- நிர்மலா சீதாராமன் சீற்றம்.

”ராகுல்காந்தியின் மொத்த குடும்பத்தினரும் கள்வர்கள் ”என்று மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமசித்து வருகிறார். இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

ராகுல்காந்தியின் மொத்த குடும்பத்தினரும் கள்வர்கள் என்றும், ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு காலத்தில் ஜீப் ஊழல், இந்திராகாந்தி காலத்தில் தேர்தல் முறைகேடு, ராஜீவ் காந்தி காலத்தில் போபர்ஸ் பீரங்கி ஊழல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் என்று அவர் பட்டியலிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் குடும்பமே ,சுயநலத்துக்காக அயராது பாடுபடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version