ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவுகிறார்-மத்திய அமைச்சர் காட்டம்

ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவி செய்வதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

ரபேல் விமான கொள்முதலில் ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது பிரதமர் மோடி நேர்மையின் சின்னம், அடையாளம் என்று வர்ணித்தார். சுதந்திர இந்தியாவில் எந்தக் கட்சியின் தலைவரும் பிரதமரை இதுபோன்று மரியாதைக்குறைவான வார்த்தைகளால் பேச முடியாது. ராகுல் காந்தியிடம் இருந்து இதற்கு மேல் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

மத்திய அரசுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுப்பதன் மூலம் ராகுல் காந்தி பாகிஸ்தானுக்குத்தான் உதவுகிறார். அனைத்துவிதமான ஆயுதக்கொள்முதல் விவகாரங்களையும் வெளிப்படையாக்கி, ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவுகிறார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமும் கடந்த 2012-ம்ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் கூறினார். ராகுல் காந்தி யார் எழுதிக்கொடுத்ததைப் படிக்கிறார் என்றும் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version