ரசிகர் மன்றத்தில் இருப்பது மட்டுமே அரசியலுக்கு தகுதி கிடையாது என்று ரஜினி கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் தனது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு, தனது ஒப்புதலுடன் அறிவிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.
ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று அர்த்தம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
30, 40 ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருப்பது மட்டுமே அரசியலில் ஈடுபட தகுதி ஆகிவிட முடியாது என்றும் ஊடகங்கள் மூலமாக அவதூறு பரப்புபவர்கள் தனது ரசிகர்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள ரஜினி, மன்றத்திற்காக உண்மையாக உழைப்பவர்களின் செயல்பாடுகளை தான் அறிவதாகவும், அந்த உழைப்பு வீண் போகாது என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.