ரஜினிகாந்த் தனது கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பரில் வெளியிடுவார் – ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்

நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பரில் வெளியிடுவார் என்று, அவரின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், டிசம்பர் 12-ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை என தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், ரஜினி அரசியல் கட்சி துவங்குவதற்கு பின்னால் பாஜக இல்லை எனக் கூறினார்.

ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பரில் வெளியிடுவார் என்று அவர் தெரிவித்தார். ரஜினிகாந்த் மற்றும் அவரது அண்ணனின் மாறுபட்ட கருத்துக்களால் ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்துள்ளனர்.

Exit mobile version