மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை உறுப்பினர், ஆஷிஷ் தேஷ்முக் ‘ரஃபேல் ஊழலின் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜக-வில் சேர்ந்தவர் தான் அஷிஷ் தேஸ்முக். பின்னர் இவர் கதோல் தொகுதியில் பாஜகவின் சார்பாக போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் தான் தேஷ்முக் ராஜினாமா செய்துள்ளார்.
பாஜக-வின் மேக்-இன்-இந்தியா திட்டம், மேக்னடிக் மகாராஷ்டிரா திட்டம், ஸ்கில் இந்தியா என எந்தத் திட்டமும் பயனளிக்கவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.
கூடுதலாக ரஃபேல் ஒப்பந்தத்தில் பெரிய ஊழலே நடந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சந்திப்புக்கு மறுநாளே தனது ராஜினாமாவை அவர் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து தேஷ்முக் கூறும் போது , இளைஞர்கள் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.