மேலும் பல வெற்றிகள் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் : கோமதிக்கு முதல்வர் வாழ்த்து

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றுள்ளார்.

கத்தார் நாட்டிலுள்ள தோஹாவில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

30 வயது நிரம்பிய இவர் 2 நிமிடம் 2 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து நாட்டிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார். ஆசிய தடகள போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளது.

தங்கப்பதக்கம் வென்றுள்ள கோமதி மாரிமுத்துவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ள செய்தியை அறிந்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போன்று மேலும் பல வெற்றிகள் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

Exit mobile version