மேலாடையின்றி பாடல் பாடிய செரீனா

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஐ டச் மைசெல்ப்” என்ற பாடலை மேலாடை இன்றி பாடி விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

“ஐ டச் மைசெல்ப்” பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிவின்ல்ஸ் என்பவர். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார். இப்போது இந்த பாடலைதான் செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார். “பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன் என தெரிவித்துள்ளார்.

செரீனாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Exit mobile version