மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்குகிறது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 46 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருவதால், உபரி நீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியில் இருந்து 46 ஆயிரத்து 210 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 79.45 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 41.41 டி.எம்.சி.யாகவும், அணையில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆயிரம் கனஅடியாகவும் உள்ளது.

Exit mobile version