மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மருத்துவ சிகிச்சை முடிந்து, காலை 9 மணிக்கு ஸ்டாலின் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version