மு.க.அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு பிடிவாரண்ட்

முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகச் செல்வி அழகிரி ஆறு ஆண்டுகளாக சுமார் 50 லட்சம் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததையடுத்து அவருக்கு எதிராக வருமான வரி துறை வழக்கு தொடர்ந்தது.

எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அஞ்சுகச் செல்வி தொடர்ந்து அஜராகாமல் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சுகச் செல்வி இன்றும் ஆஜராகாததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.

Exit mobile version