முல்லைப் பெரியாறு அணையில் 31ஆம் தேதி வரை 139 புள்ளி 99 அடி வரை நீரை தேக்கலாம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், முல்லைப் பெரியாற்றில் இருந்து தமிழகம் தண்ணீர் திறந்து விட்டதே, கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முல்லை பெரியாறு அணையின் துணைக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளது. இதனையடுத்து, முல்லை பெரியாறு அணையில் 31ஆம் தேதி வரை, 139 புள்ளி 99 அடி வரை நீர் தேக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 139.9 அடியாக தொடர்ந்து பராமரிப்பதோடு, அணையின் நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து, விசாரணையை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Exit mobile version